4.5.14

தாந்திரிக பயிற்சிகளும் வாழும்கலையும்


அன்பு குருதேவ், நான் தாந்திரிக பயிற்சிகளில் ஈடுபடலாமா என்று தயவுசெய்து கூறுங்கள். பத்து வித மகாவித்தியாக்களில் ஒரு பயிற்சியை நான் கற்றுகொண்டிருக்கிறேன், நான் அதைச் செய்யலாமா?

குருதேவ்:

பாருங்கள், பத்து மகாவித்தியாக்களும் தெரிந்தவர்கள் வெகு சிலரே. எனவே அதைச் செய்வது தேவையில்லை. சற்றே தளர்ந்து மந்திர உச்சாடனங்களை கேளுங்கள். அப்படி பல ஒலிப்பதிவுகளை வாழும்கலை வெளியிடுள்ளன, அவை அனைத்தும் இதன் பகுதிகளே. சஹஜ் தியானத்தில் உங்களுக்கு தரப்படுபவை பீஜ மந்திரங்கள், சக்தி வாய்ந்தவை. 

பத்து மகாவித்தியாக்களையும் கற்றுத் தருவதாக யாராவது கூறலாம், ஆனால் அவை மிகச் சிக்கலானவை. அவர்களை நீங்கள் தூரத்திலிருந்து மரியாதை செய்யுங்கள் போதும்.

 பயிற்சிக்கு, இங்கே கற்றுத் தரப்பட்டவையே பெரிது. விரும்பினால், இங்கே நடக்கும் வேத பாட வகுப்புகளில் சேர்ந்து கற்றுக் கொள்ளலாம். 40 நாட்களில் இவற்றை நீங்கள் வெகுவாக புரிந்துகொள்ளலாம். இந்தியாவிற்கு வந்தால், அங்கே உபநயனம் செய்விக்கிறோம்,அதிலும் நீங்கள் மந்திரங்களை கற்றுக் கொள்ளலாம். ‘நான் இதைக் கற்றுத்தருகிறேன், அதைக் கற்றுத் தருகிறேன்,’ என்று பலர் கூறலாம், ஆனால் அவையெல்லாம் குழப்பத்தைத்தான் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக