16.10.11

வாழும் கலைப் பயிற்சி பாகம்-1

மன இறுக்கம் நமது வாழ்க்கையை எந்தஅளவு பாதிக்கிறது என்பதை நாம் முழுமையாக உணருவதில்லை, அடிக்கடி நமது மனது கடந்து போன காலத்தை எண்ணி,கோபம்,வருத்தம்,வெறுப்பு ஆகிய உணர்வுகளில் சிக்கிக்கொள்கிறது, அல்லது எதிர் காலத்தைப் பற்றிய கவலை மற்றும் பயத்தில் மூழ்கி விடுகிறது. மனதின் இந்த ஊசலாட்டம் நம்மையும் நமக்கு நெருங்கியவர்களையும் மன இறுக்கத்தில் தள்ளி நமது செயல்திறனைக் குலைத்து,வாழ்கையின் தரத்தைக் குறைத்து விடுகிறது.

உடலையும்,மனதையும் இணைக்கும் ஆற்றலை உடையது மூச்சு, எனவே மனதை வயப்படுத்தி, எதிர்மறை உணர்வுகளைப் போக்கி,முழு ஆற்றலோடு வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக உணர மூச்சைக் கருவியாக்கும் கலை-வாழும்கலைப்பயிற்சி பாகம்-1 

பயிற்சியைப் பற்றி
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும்
  • பொதுவாக 6 நாட்கள், தினமும் சுமார் 3  மணிநேரம், கடைசி 2 நாட்கள் மட்டும் அதிக நேரம்
  • அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை சந்தித்து வெற்றிபெற செயல்முறை ஞானம்
  • யோகா மற்றும், இறுக்கம் போக்கும் பயிற்சிகள்
  • எளிய தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்
  • சிறப்புவாய்ந்த சுதர்சன்கிரியா  பயிற்சி
பயன்கள்
  • மன இறுக்கம் நீங்கி,புத்துணர்வு
  • ஆனந்தம்,உற்சாகம்
  • செயல்திறன் மேம்பாடு
  • தன்னம்பிக்கை,நோயற்ற வாழ்க்கை
  • மேம்பட்ட புரிதல் திறன்,முடிவெடுக்கும் திறன்
  • புத்துணர்வு,மேம்பட்ட அழகு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக