பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், 1980 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 10 நாட்கள் மௌனவிரதத்தில் இருந்தபொழுது சுதர்ஸன் கிரியா உதயமானது.
சுதர்ஸன் கிரியாவைப் பற்றி அவரே கூறுவதைப் பார்க்கலாம்,
“நான் உலகின் பலபகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு யோகா, தியானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வந்தேன் எனினும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மேலும் ஏதேனும் செய்யவேண்டும் என விரும்பினேன். எனென்றால் மக்கள் இவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் உலக வாழ்க்கை என வரும்பொழுது அவர்கள் வேறுவிதமாக இருந்தனர். அவர்களது வாழ்க்கை உள்ளும் புறமும் வேறுபட்டிருந்தது, இங்கு, இருக்கவேண்டிய ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தேன். ஆகவே அவர்களது உள்ளார்ந்த அமைதிக்கும் உலகவாழ்க்கையில் அவர்கள் வெளிப்படும் விதத்திற்கும் எப்படி ஒரு இணைப்பை ஏற்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
10 நாட்கள் மௌனத்தில் இருந்தபொழுது ஒரு அகத்தூண்டுதலாக சுதர்ஸன் கிரியா தோன்றியது. இயற்கைக்குத்தான் எதைக் கொடுக்கவேண்டும், எப்பொழுது கொடுக்கவேண்டும் என்பது தெரியுமே. மௌனத்திலிருந்து வெளிவந்ததும், எவற்றையெல்லாம் நான் அறிந்துகொண்டேனோ அவற்றை மக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன், மக்கள் அற்புதமான அனுபவங்களைப் பெற்றனர்”
-ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
அது முதற்கொண்டு சுதர்ஸன் கிரியா – ஆற்றல்மிக்க, தாள ஒழுங்குடனமைந்த மூச்சுப்பயிற்சி, வாழும்கலையின் அனைத்து பயிற்சிகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. முதல் வாழும்கலை பயிற்சி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் ஷிமோகாவில் வழங்கப்பட்டது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நமது பண்டைய ஞானத்தைத் தற்கால வாழ்க்கைக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைத்துத் தந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக