13.10.12

நீ உனக்கென்று வகுத்துக்கொண்ட பாதையில் சென்றுகொண்டே இரு.


கேள்வி : குருதேவ், நான் மிகவும் சுவாரஸ்யமில்லாதவன் என்று சொல்லி என்னுடன் யாரும் சேருவதில்லை, நான் என்ன செய்வது?

ஸ்ரீஸ்ரீ : பிறர் உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாதே. ஒரு இலக்கைக் குறித்துக்கொண்டு அதைநோக்கிச் சென்றுகொண்டிரு. நீமட்டும் தனியாகச் செல்லவேண்டியிருந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்துசென்று நீ வாழ்க்கையில் சாதிக்கநினைத்ததை நிறைவேற்று. இப்பொழுது அனைவரும் உன்னுடன் வருவார்கள்.

ஒருகாலத்தில் நானும்கூட பிறருக்கு சுவாரஸ்யமில்லாதவனாகத் தெரிந்தேன் . நான் கிரிக்கெட்டைப்பற்றி அப்பொழுது ஏதும் பேசமாட்டேன், ஆனால் அனைவரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். எனது இளம்பருவத்தில்கூட அதன்மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இருந்ததில்லை ஆனால் மக்களுக்கு அதன்மீது ஈர்ப்பு இருந்தது. ஐந்துநாட்களுக்கு மக்கள் காதுகளில் ரேடியோக்களை வைத்துக்கொண்டு கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்கள், அப்பொழுது அவர்களிடம் நான் என்னபேசமுடியும், அனைவரும் கிரிகெட்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்! வேறு பேச்சே இருக்காது. 

நீ உன்னைப்பற்றியோ,பிறரைப்பற்றியோ ஏதும் எடைபோட்டுக்கொண்டிராமல் நீ உனக்கென்று வகுத்துக்கொண்ட பாதையில் சென்றுகொண்டே இரு.

நல்லவர்கள் விழித்தெழும்போது பெரியமாற்றங்கள் ஏற்படத்தொடங்கும்.


கேள்வி : மோசமான இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன. சமுதாயத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்தசூழ்நிலையை நாம் எப்படி சமாளிப்பது?

ஸ்ரீஸ்ரீ : அதனால்தான் நாம் இந்தப்பணியை செய்துவருகின்றோம். மனிதர்களில் நல்லவர்களெல்லாம் தூங்கிக்கொண்டுள்ளனர். இந்த கலியுகத்தில், மக்களில் இருபது சதவிகிதம் பேர்தான் மோசமானவர்களாக உள்ளனர் ஆனால் நல்ல இதயம் கொண்டவர்களெல்லாம் தூங்கிக்கொண்டுள்ளனர். இந்த நல்லவர்கள் விழித்தெழும்போது பெரியமாற்றங்கள் ஏற்படத்தொடங்கும்.