13.4.15

வாழும் கலை அறிமுகம்


வாழும்கலை அமைப்பானது பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் 1981 ஆம் வருடம் தொடங்கப்பட்டது,வாழும்கலை அமைப்பானது இலாபநோக்கமில்லாத ஒரு மனிதநேய அமைப்பாகும். இவ்வமைப்பு அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கையில், மன இறுக்கமின்றி மகிழ்ச்சியாக வாழவும்,துயர் துடைப்பு மற்றும் சமுதாய மேம்பட்டுப் பணிகளை நிறைவேற்றவும்,தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. வாழும்கலை அமைப்பானது உலகெங்கும் 151 நாடுகளில் ஆலமரமாகப் பரவியுள்ளது.

 "நாம் நமது மன இறுக்கத்தைப் போக்காமல் நமது சமுதாயத்திலிருந்து வன்முறையைக் களைய முடியாது,மன இறுக்கத்தை, சமுதாயத்தில் வன்முறையைப் போக்காமல் உலக அமைதி என்பதை அடையமுடியாது"
எனும் ஸ்ரீஸ்ரீ அவர்களின் வாக்குப்படி, ஒவ்வொரு தனி மனிதனும் மன இறுக்கத்திலிருந்து விடுபடும் விதமாகவும்,உள்ளார்ந்த அமைதியையும்,நிம்மதியையும்,ஆனந்தத்தையும் உணரும் விதமாகவும்  வாழும்கலை அமைப்பின் செயல்முறைகள் அமைந்துள்ளன.

வாழும்கலை அமைப்பின்: மன இறுக்கத்தைப் போக்கக்கூடிய மூச்சுப்பயிற்சி முறைகள்,தியானம் மற்றும் யோகா பயிற்சி மூலம் உலகமெங்கும் கோடிக்கனக்கான மக்கள், மன இறுக்கம்,விரக்தி மற்றும் வன்முறை எண்ணம் அகியவற்றிலிருந்து விடுபட்டு ஆனந்தம் அடைந்துள்ளனர்

வாழும்கலை அமைப்பானது, பேரிடர்கால உதவி, நீடித்த நிலைத்த கிராமப்புர வளர்ச்சித் திட்டங்கள்,பெண்களுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், சிறைகளிலிருந்து விடுதலையடைந்தோருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள்,அனைவருக்கும் கல்வி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்படுககள் ஆகியவற்றின் மூலமாக உலகெங்கும் அமைதியையும் வளர்ச்சியையும் பரவலாக்கி வருகிறது

துணை அமைப்புகள்

மேற்கண்ட இலக்குகளை அடையும் விதமாக்வாழும்கலை அமைப்பானது பல துணை அமைப்புகளைக் கொண்டுள்ளது அவை,

உலகளாவிய மனித மாண்புகளுக்கான கூட்டமைப்பு(I.A.H.V)
வேத் விஞ்ஞான் மஹா வித்யா பீத்(VVMVP)
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர்(SSRVM)
வியக்தி விகாஸ் கேந்த்ரா இந்தியா(VVKI)
கே: அன்பான குருதேவா! ஒன்றும் செய்யாமல் இருப்பது நமக்கு இத்தனை இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்குமானால், நாம் ஏன் ஏதாவது காரியம் செய்ய வேண்டும்?

குருதேவர்: உன் இயல்பின் படி, நீண்ட நேரத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருக்க உன்னால் முடியாது. நிகழ்ச்சிகளின் வேறு பாட்டினை உணரும் போது தான் பரமானந்தத்தை அனுபவிக்க முடியும். நீ ஏதாவது காரியம் செய்யும் போது, 100 % முயற்சியோடு ஈடுபடும்போது தான் எதையும் செய்யாமல் இருப்பதின் மதிப்பை உணரலாம்.

பார்! நீ மிகவும் சுறுசுறுப்போடு ஓடியாடி வேலை செய்த பின்னால் தான் அயர்ந்த ஓய்வை அனுபவிக்கிறாய். நாள் முழுதும் ஒரு வேலையும் செய்யாமல் படுக்கையில் படுத்திருந்தால், இரவில் உன்னால் தூங்க முடியாது. அதனால் நீ செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வது அவசியம்.

நாம் செய்ய வேண்டிய வேலைகள் சில உண்டு. அந்த வேலைகளைச் செய்யும் போது, இடையில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலைகளும் ஏற்படும்.