சுதர்ஸன் கிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுதர்ஸன் கிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.10.11

சுதர்ஸன் கிரியா-தோற்றம்




பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், 1980 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 10 நாட்கள் மௌனவிரதத்தில் இருந்தபொழுது சுதர்ஸன் கிரியா உதயமானது.


சுதர்ஸன் கிரியாவைப் பற்றி அவரே கூறுவதைப் பார்க்கலாம்,

“நான் உலகின் பலபகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு யோகா, தியானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வந்தேன் எனினும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மேலும் ஏதேனும் செய்யவேண்டும் என விரும்பினேன். எனென்றால் மக்கள் இவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் உலக வாழ்க்கை என வரும்பொழுது அவர்கள் வேறுவிதமாக இருந்தனர். அவர்களது வாழ்க்கை உள்ளும் புறமும் வேறுபட்டிருந்தது,  இங்கு, இருக்கவேண்டிய ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தேன்.  ஆகவே அவர்களது உள்ளார்ந்த அமைதிக்கும் உலகவாழ்க்கையில் அவர்கள் வெளிப்படும் விதத்திற்கும் எப்படி ஒரு இணைப்பை ஏற்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

10 நாட்கள் மௌனத்தில் இருந்தபொழுது ஒரு அகத்தூண்டுதலாக சுதர்ஸன் கிரியா தோன்றியது. இயற்கைக்குத்தான் எதைக் கொடுக்கவேண்டும், எப்பொழுது கொடுக்கவேண்டும் என்பது தெரியுமே. மௌனத்திலிருந்து வெளிவந்ததும், எவற்றையெல்லாம் நான் அறிந்துகொண்டேனோ அவற்றை மக்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன், மக்கள் அற்புதமான அனுபவங்களைப் பெற்றனர்”
-ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

அது முதற்கொண்டு சுதர்ஸன் கிரியா – ஆற்றல்மிக்க, தாள ஒழுங்குடனமைந்த மூச்சுப்பயிற்சி, வாழும்கலையின் அனைத்து பயிற்சிகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. முதல் வாழும்கலை பயிற்சி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் ஷிமோகாவில் வழங்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் நமது பண்டைய ஞானத்தைத் தற்கால வாழ்க்கைக்குப் பயன்படும் விதத்தில் வடிவமைத்துத் தந்துள்ளார்.

சுதர்ஸன் கிரியா-அறிமுகம்




 சுதர்ஸன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

மூச்சின்மூலம் உணர்ச்சிகளைக் கையாளுதல்

மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

உதாரணமக நாம் கோபமாக இருக்கும்பொழுது நமது மூச்சு குறுகியதாகவும்,வேகமனதாகவும் இருந்தது

Angry: Your breath comes in short, quick cycles
கோபம்: குறுகிய வேகமான மூச்சு

நாம் சோகமாக இருக்கும்பொழுது நமது மூச்சு ஆழமானதாகவும்,நீண்டதாகவும் இருந்தது 


Sad or upset: Your breath comes in long and deep cycles
சோகம்: நீண்ட ஆழமான மூச்சு

இதன் மறுபக்கமும் உண்மையானது, அதாவது நாம் நமது மூச்சை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது அதனுடன் தொடர்புடைய உணர்ச்சியைத் தூண்டும். ஆகவே உணர்சிகளாள் ஆட்கொள்ளப்படுவதற்கு பதிலாக குறிப்பிட்ட விதத்தில் மூச்சை ஒழுங்குபடுத்தி அவற்றை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

சுதர்ஸன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

மேம்பட்ட ஆரோக்கியம், நல்ல மனநிலை, சிறந்த வாழ்க்கை


சுதர்ஸன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது.  நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன (படத்தைக் காணவும்).


சுதர்ஸன் கிரியாவின் அற்புதமான ஆற்றலால், கிராமம்,நகரம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, பெரிய நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், படை வீரர்கள், பெரும் துன்பங்களால் பாதிக்கப் பட்டவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், சிறைவாசிகள் என அனைத்து விதமான மக்களும் என்னற்ற நற்பலன்களையும் மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்க்கையையும் அடைந்துள்ளனர். 


சுதர்ஸன் கிரியா வின் பலன்கள் பற்றியும், நமது உடலில் மனதில் சுதர்ஸன் கிரியா செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளையும் அறிய இதன்மீது க்ளிக் செய்யவும்