10.9.12

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமைகோரி கையெழுத்துப் பேரியக்கம்

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,போன்ற பல உலக நாடுகள் குடியுரிமை வழங்கி வசதியாக வாழ வைத்துள்ளன.

வங்கதேசம் போன்ற பல பக்கத்து நாட்டு அகதிகளுக்கு நமது இந்திய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது.

ஆனால் 30 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத்தமிழருக்கு  குடியுரிமை  மறுக்கப்படுகிறது. இவர்களுக்கு  குடியுரிமை வழங்கக்கோரி வாழும்கலை பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. இந்தியக்குடியுரிமை  வழங்கிட மீண்டும், மீண்டும்  வலியுருத்துகிறது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு
 கேட்டுக்கொள்கிறோம்


5.9.12

மாயையையும் அதன் விதங்களும்






 மாயையில் மூன்று விதங்கள், முதலாவது மோக மாயை. கண்ணை மறைக்கும் அளவிற்கு செல்வத்தின் மீதோ, குழந்தைகளின் மீதோ பற்று இருந்தால் அது தான்  மோக  மாயை.

பலருக்கு, மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், இவர்கள் யாருமே  பணத்தின் முன் ஒரு பொருட்டல்ல, பணத்திற்காக பெற்றோரையே மன நலம் குன்றியவர்களாகச் சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவோ, ஏன் கொலை செய்யவோ கூட இவர்கள் தயாராக இருப்பார்கள்.

அதே போல் சிலர் தங்கள் குழைந்தைகளுடனே 24 மணிநேரமும் இருக்க வேண்டுமென விரும்புவர். அந்தக் குழந்தைக்கு எது நன்மை செய்யும், எது தீமை செய்யும் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை & இதுவும் மோக மாயை தான்.  நமக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுக்காத அதே சமயம், எதன் இல்லாமை நமக்குத் துன்பத்தைக் கொடுக்குமோ, அதுவே மோக மாயை.

பின் வருவது மகா மாயை. இது இயற்கையிலிருந்து வருவது, உண்மையை நாம் தெளிவாகப் பார்க்க முடியாமல் செய்வது. அதில் சிக்கி நாம் உணர்வுகளற்ற கல் போல் ஆகி விடுகிறாம்.

அதன் பின் வருவது யோக மாயை. யோகத்தில் கூட மாயை இருப்பது ஆச்சரியம் தான். அண்மையில் நீங்கள் நிர்மல் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆன்மீகத்தின் பெயரில் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபட்டதாக அவர் மேல் குற்றச்சாட்டு உள்ளது. உண்மையில் அவர் நல்லவர், கள்ளம் கபடமற்றவர், மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியவாறு இருந்தார், அவர் யோக மாயையில் சிக்கியிருந்தார், அவ்வளவு தான், ஆனால் மக்கள் அவரை ஏமாற்றுக்காரர் என்று பட்டமே சூட்டி விட்டனர்.

சில சமயங்களில் என்ன ஆகிறதென்றால், தொடர்ந்து யோக சாதனை செய்து வரும்போது, ஒருவருக்குள்ளிருந்து சில தெய்வீக சக்திகள் உயிர் பெற்று எழுகின்றன. அப்போது ஒருவருக்குள் எதிர்காலத்தை அனுமானிக்கும் அளவிற்கு உள்ளுணர்வு உயிர்த்தெழுகிறது. அப்போது மனம் ஆகாயம் போல் நிர்மலமாக இல்லாதிருப்பின், விருப்பு வெறுப்பு ஒட்டிக்கொண்டிருப்பின், அவை அந்த உள்ளுணர்வை மங்கச்செய்து அதன் பயனைப் பாதியாகக் குறைத்து விடும்.

இப்படி யோக மாயையில் சிக்கிய ஒரு பெண்மணியையும் நான் அறிவேன். 25, 30 வருட யோக சாதனையின் மூலம் சில தெய்வீக சித்திகளை அடைந்து அம்பாளின் அனுக்ரஹத்திற்குப் பாத்திரமானவர் எனத் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அம்பாள் தன்னை விடாது நடத்தி செல்வதாகக் கூறுவார் இவர்.

இவரது கணவருக்கு சர்க்கரை வியாதி. அம்பாள் அதை குணப்படுத்த ஆசீர்வாதம் மட்டுமே போதும் என்பதாகவும், மருந்துகள் தேவையில்லை எனக் கூறுவதாகவும் இவருக்குத் தோன்ற அதை அப்படியே கடைபிடித்தார். சில நாட்களில் சர்க்கரை வியாதி முற்றி அவரது கணவரின் கண்கள் குருடாயின.

அப்பெண்மணி பிறருக்குக் கூறியதெல்லாம் உண்மையாயின. ஆனால் இந்த ஒரு நிகழ்வுக்குப் பின் அவரது மனம் மிகவும் சங்கடத்துக்குள்ளாகியது. என்னிடம் வந்து ‘குரு தேவா, ஏன் இப்படி ஆயிற்று, ஏன் என் கணவருக்கு இப்படி ஆயிற்று’ என வினவ, அவர் யோக மாயையில் கட்டுண்டிருப்பதை நான் சுட்டிக் காட்டினேன்.

நிர்மல் பாபாவிற்கும் இப்படித்தான் ஆயிற்று. நம்மால் சிலதைப் புரிந்து கொள்ள முடியும், சிலதைப் புரிந்து கொள்ள முடியாது. குண்டலினி சக்தி மேலெழும்போது நமது ஆசீர்வதிக்கும் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் இது நமது விருப்பு வெறுப்புக்களுடன் குறுக்கிடும் போது அதன் சக்தி அப்படியே இருப்பதில்லை. நிர்மல் பாபாவிற்கும் அப்படித்தான் ஆயிற்று. அவராலேயே அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதைப் புரிந்து கொண்டால், நம்மால் ஆன்ம உணர்வில் ஒன்றி, மனதை நடுநிலையில், ஞானத்தில் நிறுத்தி வைக்க முடியும். அடையப்படும் தெய்வீக சித்திகள் நம் கண்களை மறைக்காது. அப்போது ஆசீர்வாதங்கள் தங்கு தடையின்றிப் பலனளிக்கும்.

யோக சாதனையாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் பிறரை வியாதியிலிருந்து குணப்படுத்தவும், அவர்களது ஆசைகளையும், பிரார்த்தனையையும் நிறைவேற்றவும் வல்ல ஆசீர்வாதத்தை வழங்கும் சக்தி அடையப்படுகிறது.

ஆனால் அதே சமயம் நாம் சில பரிகாரங்களைக் கூறி மூட நம்பிக்கைகளை வளர்ப்பது சரியல்ல. கடவுள் அருள், புண்ணியத்தால், தான தருமங்களால் வருவதல்ல, அதற்கு எந்த நியதியும் தேவையல்ல. எதையாவது செய்து, அதானல் கிடைப்பதற்குப் பெயர் அருள் அல்ல, அது வியாபாரம். ஆனால் அப்படி நம்மை நினைக்க வைப்பது தான் யோக மாயை.

எப்போதும் எங்கும் பரந்து இருக்கும் அருட்கடலில் நாம் மூழ்கியிருப்பதை நினைவு கூர்ந்தாலே போதுமானது. நம்மிடம் நன்றியுணர்வும் த்ருப்தியும் அதிகரிக்க அதிகரிக்க, நம் வாழ்வில் அருளின் அனுபவம் சித்தமாகும். எப்போதும் முணுமுணுத்து கொண்டயிருக்கும் மனதால் அருளை அறிய முடியாது. ஏதோ விசேஷ அருள் எங்கோ இருப்பதாக நினைக்க வேண்டாம், அருள் எங்கும் எப்போதும் இருப்பது தான், அதைப்பற்றிய விழிப்புணர்வு மட்டுமே நமக்கு வேண்டும்.

ஆன்மீக சாதகர்களின் ஆசீர்வதிக்கும் சக்தியை நாம் குறைகூற வேண்டியதில்லை. ஆனால் அதை வைத்து செல்வம் ஈட்ட விரும்பினால் , அதுவே வியாபாரம் ஆகிறது, அவர்களது ஆசீர்வதிக்கும் சக்தியும் குறைந்து போகிறது. இருப்பினும் யாராவது பக்தியுடன் உங்களுக்கு ஏதாவது அளிக்க விரும்பினால், அதை ஏற்றுப் புண்ணிய காரியங்களுக்கு செலவிடவும்.

இப்படியிருக்க, ‘வாழும் கலைப் பயிற்சிக்கு நாம் ஏன் பணம் செலவிடவேண்டும்’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மாணவனாக இருந்து ஞானம் பெறும்போது ஆசிரியருக்கு தக்ஷிணை அளிப்பது அவசியம்.

ஞானம் பெறுவது ஒரு புனித யக்ஞம் போன்றது. எதையாவது ஆசிரியருக்கு அளித்து மட்டுமே பெறக்கூடியது. அப்போது தான் அந்த ஞானம் நம்மிடம் நிலைக்கும். இப்படித்தான் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆசிரியருக்கு உண்டான தக்ஷிணையை செலுத்திய பின்பே நம்மால் கவனத்துடனும், நேர்மையுடனும் கற்க முடிகிறது.இல்லாவிடில் இலவச வகுப்பில் இன்று வருபவர்கள் நாளை வருவதில்லை. மாணவனின் நலனைக் கருதியே தக்ஷிணை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குருவானவர் சாஸ்திர ஞானம் உள்ளவராகவும், அதை நன்கு வெளிப்படுத்தக் கூடியவராகவும், சத்தியத்தில் நிலைபெற்றவராகவும் இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. அப்படியில்லையென்றால், இந்த விளையாட்டுகளெல்லாம் யோக மாயையால் வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும்.

இவற்றைக் கண்டு கோபப்படுவது இயல்பு. ஆனால் கோபத்தால் சக்தியிழப்பு தான் ஏற்படுகிறது. ஒருவரிடம் இந்த சக்திகள் மலரத் தொடங்கும் போது அவர்களுடைய உலகமே மாறி விடுகிறது. இங்கு நடப்பதற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. அந்த நேரத்தில் தான் மனம் விளையாடத் தொடங்குகிறது.

எனவே அவர்கள் கெட்டவர்களோ நேர்மையற்றவர்களோ அல்ல. யோக மாயையில் சிக்கியவர்கள், அவ்வளவே. எனவே யோக சாதனை செய்தாலும் யோக மாயையை வெல்வது அவசியம். அப்போது தான் வாழ்வில் பூரணத்துவம் பரிமளிக்கும்.

சாதகர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முதலில் கைகூடுவது பிறரை சபிக்கும் சக்தி தான். சாதகர்களின் எண்ணமோ, கோபமோ சக்தி வாய்ந்தது. இதை மனதில் கொண்டு, விழிப்புணர்வுடன் தாராளமாக அனைவரையும் ஆசீர்வதியுங்கள்.

பிறரை ஆசீர்வதிப்பதனால் நமக்கு ஒன்றும் குறை வராது. அப்படிப்பட்ட எண்ணம் வருவதும் யோக மாயையினால் தான்.

யோக மாயையிலேயே பல விதங்கள் உண்டு,சிலருக்கு யாராவது தங்களைத் தொட்டாலே, தங்கள் சக்தி அவர்களுக்குப் போய் விட்டதாக நினைப்பர். ஒரு சில நியமங்கள் இருப்பதில் தவறில்லை, ஆனால் நாம் அனைவருமே சைதன்யக் கடலில் மூழ்கியிருப்பதை மறக்க வேண்டாம்.

சிறிய சக்திகளில் மனம் கட்டுண்டிருப்பது யோக மாயை. அதைக்கடந்து நிற்கும் போது இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நம்மை அடைகின்றன. இந்நிலையில் பிறரை ஆசீர்வதிக்கும் போது அவர்களின் ஆசை அவாக்கள் பூர்த்தியடைகின்றன.

4.9.12

நம் முன்னோர்களை வணங்குதல்-காரணம் என்ன?


 இறந்தவர்களின் ஆன்மாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான் நாம் இந்த சடங்குகளில் ஈடுபடுகிறோம். ஆனால் நடுவில் பண்டிதர்களும், புரோகிதர்களும் நமக்குப் புரியாத பலவற்றைச் சொல்லி இந்த சடங்குகளை மிகவும் சிக்கல் நிறைந்ததாக்கி விட்டார்கள்.

அவர்கள் சமஸ்கிருதத்தில் சொல்வதை மொழி பெயர்த்தால் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள்.  நாம் எள்ளை கையில் எடுத்துதர்ப்பயாமி, தர்ப்பயாமி தாரையாமிசொல்வது எதற்காக என்று தெரியுமா? அதற்கு தர்ப்பணம் என்று பெயர்.

இறந்தவரின் பெயரைச் சொல்லி, சிறிது எள்ளும் நீரும் கையில் எடுத்து தட்டில் ஊற்றுகிறோம். ஏன் அப்படிச் செய்கிறோம்? இறந்தவரின் ஆன்மாவிடம்உங்கள் நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருந்தால், அவை இந்த எள் விதைக்குச் சமம். குறிப்பிட்டுச் சொல்லும் அளவு பெரிதல்ல. அவை சின்ன சின்ன விஷயங்களே. அதை விட்டு விடுங்கள். இறைவன் அடியில் அளவு கடந்த ஆனந்தம் இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். உங்களின் நிறைவேறாத ஆசைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.” என்று சொல்கிறோம். இதையே தர்ப்பணத்தின் போது இறந்தவர்களின் ஆன்மாவிடம் சொல்கிறோம்.

இறந்தவர்களுக்கு இன்னும் ஆசைகள் இருக்கும். அவர்களின் பேரக் குழந்தைகளின் திருமணத்தைக் காண விரும்பியிருப்பார்கள். (கொள்ளு பேரன் திருமணத்தைக் கூட) அல்லது கொள்ளு பேத்தியின் மகளைக் காண விரும்புவார்கள். இந்த மாதிரியான ஆசைகள் அவர்கள் இறக்கும் சமயத்தில் அவர்கள் மனதில் இருந்திருக்கக் கூடும். நாம் அவர்களுக்குஇந்த ஆசைகள் மிகவும் சிறியவை. அதை விட்டு விடுங்கள்என்று சொல்கிறோம். வாழ்க்கையின் சாரமே அன்பு தான். அன்பே இறைவன். அந்த ஒளி பொருந்திய அன்பான பரம் பொருளை நோக்கிச் செல்லுங்கள் என்று இறந்தவரின் ஆன்மாவுக்குச் சொல்வதேசிரார்த்தம்என்பதாகும்.

மேலும் இந்தச் சடங்குகளின் மூலம் அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம். “நீங்கள் விரும்பியவற்றைச் செய்கிறோம். எங்களை வாழ்த்துங்கள்என்று சொல்கிறோம்.

இந்த மாதிரி சிரார்த்தம் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் உண்டு. தென் அமெரிக்காவில் கூட இது நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரில் உள்ள அனைவரும் திரண்டு வந்து இறந்தவர்களை நினைத்து அவர்கள் உருவத்தைச் செய்த பொம்மைகளை எரிக்கிறார்கள். பல விதமான சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.  சீனாவிலும், சிங்கப்பூரிலும் கூட இது மாதிரி சடங்குகள் உண்டு.

சிங்கப்பூரில் எப்படிப்பட்ட சடங்கு என்று தெரியுமா? இறந்தவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தினம் இருக்கிறது. அன்று இறந்தவர்களின் பிரியமான பொருட்களை காகிததால் செய்து அவைகளை எரிக்கிறார்கள். ஒருவருடைய தகப்பனாருக்கு கார் பிடிக்கும் என்றால் காகிதத்தால் ஒரு அழகிய பென்ஸ் கார் செய்து தெருவில் வைத்து எரிப்பார்கள். சிங்கப்பூர் பொதுவாக தூய்மையான நகரம். ஆனால் அன்றைய தினம் ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான எரிந்த காகிதப் பொருட்கள் கிடக்கும்.

சீனாவில் ஒரு நம்பிக்கை. ரூபாய் நோட்டுக்களை (கள்ள நோட்டு) எரித்தால் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்கள் உங்களை அதிர்ஷ்டமடைய வாழ்த்துவார்கள். சில சமயம் நான் இதை ஏமாற்று வேலை என்று நினைப்பேன். அதே சமயம் அதில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து சரி என்று கொள்வேன். நடுத்தெருவில் காகித வீடுகளைக் கட்டி எரிப்பதால், அதிர்ஷ்டம் வரும் (முன்னோர்களின் வாழ்த்துக்களால்) என்று நம்புகிறார்கள். பித்ரு லோகத்தில் (முன்னோர்கள் இருப்பிடம்) இருப்பவர்களைத் தொடர்பு கொள்வதுசிரத்தைஎன்பது. அது தான் நம்பிக்கை. பித்ருலோகத்துக்குச் சென்றவர்களைச் சிறப்பிப்பது ஒரு சடங்காக இருக்கிறது.

ஐரோப்பாவில் கூடஎல்லா புனிதர்களின் தினம்என்று ஒருநாள் மலர்களை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குச் செல்வது வழக்கம். சிரத்தை என்பது எல்லா மதங்களிலும், கலாசாரங்களிலும் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் இதை மிகவும் உயர்வாக அர்த்தமுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது மக்களுக்குப் புரியவில்லை.

பிண்ட தானத்தில்நம் உடல் நாம் உண்ணும் உணவால் வளர்ந்தது. இல்லையா? – சடங்கில் அன்னத்தைப் பந்து போல் செய்து (அல்லது இறந்தவருக்குப் பிடித்த உணவை) ஏழைகளுக்குத் தானம் செய்வது வழக்கம்.

இது ஒரு நம்பிக்கை. நன்றியுடன் செய்வது. ஒரு உத்சவம் போல் நம் முன்னோர்களை நினைத்துக் கொண்டாடுவது. இறந்தவர்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவை சமைத்து, படைத்து, பிறகு அதை சிலருக்கு அளித்து மகிழலாம்.

அவர்கள் இருக்கும் லோகத்தில் அவர்கள் ஆனந்தமாக மேலும் முன்னேற வாழ்த்தி, அவர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களின் வாழ்த்தைக் கோரி நாம் நம்முடைய பாதையில் முன்னேறலாம். நாம் செய்ய வேண்டியது அது தான்.