சுதர்ஸன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.
மூச்சின்மூலம் உணர்ச்சிகளைக் கையாளுதல்
மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
உதாரணமக நாம் கோபமாக இருக்கும்பொழுது நமது மூச்சு குறுகியதாகவும்,வேகமனதாகவும் இருந்தது
கோபம்: குறுகிய வேகமான மூச்சு
நாம் சோகமாக இருக்கும்பொழுது நமது மூச்சு ஆழமானதாகவும்,நீண்டதாகவும் இருந்தது
சோகம்: நீண்ட ஆழமான மூச்சு
இதன் மறுபக்கமும் உண்மையானது, அதாவது நாம் நமது மூச்சை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒழுங்குபடுத்தினால் அது அதனுடன் தொடர்புடைய உணர்ச்சியைத் தூண்டும். ஆகவே உணர்சிகளாள் ஆட்கொள்ளப்படுவதற்கு பதிலாக குறிப்பிட்ட விதத்தில் மூச்சை ஒழுங்குபடுத்தி அவற்றை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.
சுதர்ஸன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.
மேம்பட்ட ஆரோக்கியம், நல்ல மனநிலை, சிறந்த வாழ்க்கை
சுதர்ஸன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன (படத்தைக் காணவும்).
சுதர்ஸன் கிரியாவின் அற்புதமான ஆற்றலால், கிராமம்,நகரம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, பெரிய நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், படை வீரர்கள், பெரும் துன்பங்களால் பாதிக்கப் பட்டவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், சிறைவாசிகள் என அனைத்து விதமான மக்களும் என்னற்ற நற்பலன்களையும் மகிழ்ச்சியையும், நோயற்ற வாழ்க்கையையும் அடைந்துள்ளனர்.
சுதர்ஸன் கிரியா வின் பலன்கள் பற்றியும், நமது உடலில் மனதில் சுதர்ஸன் கிரியா செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளையும் அறிய இதன்மீது க்ளிக் செய்யவும்
சுதர்ஸன் கிரியா வின் பலன்கள் பற்றியும், நமது உடலில் மனதில் சுதர்ஸன் கிரியா செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளையும் அறிய இதன்மீது க்ளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக