இறந்தவர்களின்
ஆன்மாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான்
நாம் இந்த சடங்குகளில் ஈடுபடுகிறோம்.
ஆனால் நடுவில் பண்டிதர்களும், புரோகிதர்களும்
நமக்குப் புரியாத பலவற்றைச் சொல்லி
இந்த சடங்குகளை மிகவும் சிக்கல் நிறைந்ததாக்கி
விட்டார்கள்.
அவர்கள்
சமஸ்கிருதத்தில் சொல்வதை மொழி பெயர்த்தால்
நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள். நாம்
எள்ளை கையில் எடுத்து “தர்ப்பயாமி,
தர்ப்பயாமி தாரையாமி” சொல்வது எதற்காக என்று
தெரியுமா? அதற்கு தர்ப்பணம் என்று
பெயர்.
இறந்தவரின்
பெயரைச் சொல்லி, சிறிது எள்ளும்
நீரும் கையில் எடுத்து தட்டில்
ஊற்றுகிறோம். ஏன் அப்படிச் செய்கிறோம்?
இறந்தவரின் ஆன்மாவிடம் “உங்கள் நிறைவேறாத ஆசைகள்
ஏதாவது இருந்தால், அவை இந்த எள்
விதைக்குச் சமம். குறிப்பிட்டுச் சொல்லும்
அளவு பெரிதல்ல. அவை சின்ன சின்ன
விஷயங்களே. அதை விட்டு விடுங்கள்.
இறைவன் அடியில் அளவு கடந்த
ஆனந்தம் இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.
உங்களின் நிறைவேறாத ஆசைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.”
என்று சொல்கிறோம். இதையே தர்ப்பணத்தின் போது
இறந்தவர்களின் ஆன்மாவிடம் சொல்கிறோம்.
இறந்தவர்களுக்கு
இன்னும் ஆசைகள் இருக்கும். அவர்களின்
பேரக் குழந்தைகளின் திருமணத்தைக் காண விரும்பியிருப்பார்கள். (கொள்ளு பேரன்
திருமணத்தைக் கூட) அல்லது கொள்ளு
பேத்தியின் மகளைக் காண விரும்புவார்கள்.
இந்த மாதிரியான ஆசைகள் அவர்கள் இறக்கும்
சமயத்தில் அவர்கள் மனதில் இருந்திருக்கக்
கூடும். நாம் அவர்களுக்கு “இந்த
ஆசைகள் மிகவும் சிறியவை. அதை
விட்டு விடுங்கள்” என்று சொல்கிறோம். வாழ்க்கையின்
சாரமே அன்பு தான். அன்பே
இறைவன். அந்த ஒளி பொருந்திய
அன்பான பரம் பொருளை நோக்கிச்
செல்லுங்கள் என்று இறந்தவரின் ஆன்மாவுக்குச்
சொல்வதே ‘சிரார்த்தம்” என்பதாகும்.
மேலும்
இந்தச் சடங்குகளின் மூலம் அவர்களின் ஆசிர்வாதத்தை
வேண்டுகிறோம். “நீங்கள் விரும்பியவற்றைச் செய்கிறோம்.
எங்களை வாழ்த்துங்கள்” என்று சொல்கிறோம்.
இந்த மாதிரி சிரார்த்தம் உலகத்தின்
எல்லா பகுதிகளிலும் உண்டு. தென் அமெரிக்காவில்
கூட இது நடக்கிறது. ஒரு
குறிப்பிட்ட நாளில் ஊரில் உள்ள
அனைவரும் திரண்டு வந்து இறந்தவர்களை
நினைத்து அவர்கள் உருவத்தைச் செய்த
பொம்மைகளை எரிக்கிறார்கள். பல விதமான சடங்குகளை
நிறைவேற்றுகிறார்கள். சீனாவிலும், சிங்கப்பூரிலும் கூட இது மாதிரி
சடங்குகள் உண்டு.
சிங்கப்பூரில்
எப்படிப்பட்ட சடங்கு என்று தெரியுமா?
இறந்தவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தினம்
இருக்கிறது. அன்று இறந்தவர்களின் பிரியமான
பொருட்களை காகிததால் செய்து அவைகளை எரிக்கிறார்கள்.
ஒருவருடைய தகப்பனாருக்கு கார் பிடிக்கும் என்றால்
காகிதத்தால் ஒரு அழகிய பென்ஸ்
கார் செய்து தெருவில் வைத்து
எரிப்பார்கள். சிங்கப்பூர் பொதுவாக தூய்மையான நகரம்.
ஆனால் அன்றைய தினம் ஒவ்வொரு
தெருவிலும் ஏராளமான எரிந்த காகிதப்
பொருட்கள் கிடக்கும்.
சீனாவில்
ஒரு நம்பிக்கை. ரூபாய் நோட்டுக்களை (கள்ள
நோட்டு) எரித்தால் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்கள்
உங்களை அதிர்ஷ்டமடைய வாழ்த்துவார்கள். சில சமயம் நான்
இதை ஏமாற்று வேலை என்று
நினைப்பேன். அதே சமயம் அதில்
அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து சரி என்று கொள்வேன்.
நடுத்தெருவில் காகித வீடுகளைக் கட்டி
எரிப்பதால், அதிர்ஷ்டம் வரும் (முன்னோர்களின் வாழ்த்துக்களால்)
என்று நம்புகிறார்கள். பித்ரு லோகத்தில் (முன்னோர்கள்
இருப்பிடம்) இருப்பவர்களைத் தொடர்பு கொள்வது “சிரத்தை”
என்பது. அது தான் நம்பிக்கை.
பித்ருலோகத்துக்குச் சென்றவர்களைச் சிறப்பிப்பது ஒரு சடங்காக இருக்கிறது.
ஐரோப்பாவில்
கூட “எல்லா புனிதர்களின் தினம்”
என்று ஒருநாள் மலர்களை எடுத்துக்கொண்டு
இடுகாட்டுக்குச் செல்வது வழக்கம். சிரத்தை
என்பது எல்லா மதங்களிலும், கலாசாரங்களிலும்
இருக்கிறது. சமஸ்கிருதத்தில் இதை மிகவும் உயர்வாக
அர்த்தமுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது மக்களுக்குப்
புரியவில்லை.
பிண்ட தானத்தில் – நம் உடல் நாம்
உண்ணும் உணவால் வளர்ந்தது. இல்லையா?
– சடங்கில் அன்னத்தைப் பந்து போல் செய்து
(அல்லது இறந்தவருக்குப் பிடித்த உணவை) ஏழைகளுக்குத்
தானம் செய்வது வழக்கம்.
இது ஒரு நம்பிக்கை. நன்றியுடன்
செய்வது. ஒரு உத்சவம் போல்
நம் முன்னோர்களை நினைத்துக் கொண்டாடுவது. இறந்தவர்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவை சமைத்து, படைத்து,
பிறகு அதை சிலருக்கு அளித்து
மகிழலாம்.
அவர்கள்
இருக்கும் லோகத்தில் அவர்கள் ஆனந்தமாக மேலும்
முன்னேற வாழ்த்தி, அவர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களின்
வாழ்த்தைக் கோரி நாம் நம்முடைய
பாதையில் முன்னேறலாம். நாம் செய்ய வேண்டியது
அது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக