16.10.11

ஆர்ட் எக்ஸெல் பயிற்சி

Art Excel-All Round Training in Excellence

நாம் நமது குழந்தைகள் அனைவரும் வெற்றிகரமானவர்களாக விளங்கவேண்டும் என விரும்புகிறோம்,

வெற்றிகரமான குழந்தை என்றால் யார்?  

"மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, சூழ்நிலைகளோடு ஒத்திசையும் தன்மையுடைய, வாழ்க்கையில் தான் சந்திக்கும் சவால்களை திறம்பட எந்த ஒரு குழந்தை சமாளிக்கிறதோ அதுவே வெற்றிகரமான குழந்தை ஆகும்"
என்பது குருதேவரின் வாக்கு

 நமது குழந்தைகள் அனைவரையும் அத்தகைய வெற்றிகரமானவர்களாக  மாற்றுவதே ஆர்ட் எக்ஸெல் பயிற்சி

பயிற்சி பற்றி
  • யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள்
  • அச்சம் மற்றும் இறுக்கத்தைப் போக்கும் பயிற்சிகள்
  • மனம் ஒருமுகப்படுவதற்கான பயிற்சிகள்
  • தியானப் பயிற்சியோடு தலைமைப் பண்பு,நட்புணர்வு,குழுவாகச் சேர்ந்து செயல்படல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள், போன்றவற்றைக் கொண்டது
8 முதல் 13 வயதுவரையான அனைத்துதரப்பு குழந்தைகளுக்குமானது,விளையாட்டானதாகவும் செயல்முறை சார்ந்ததாகவும் அமைக்கப்பட்ட இப் பயிற்சி, அவர்களது தனித் திறனை மேம்படுத்துவதோடல்லாமல்,அவர்களுக்குள் இயற்கையாக உள்ள ஆற்றல் வெளிப்படவும் வழியமைத்துக் கொடுக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக